வாரம் 13: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனை தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 6 - பகுதி 1: 3.4 - தெரிந்து கொண்டு பேசுவோம் - பக்கம் 69-70
பாடநூல் 6 - பகுதி 1: 3.5 - கருத்தூன்றிப் படிப்போம் - பக்கம் 71-72
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வாக்கியம் அமை
வாக்கியங்களில் குறைந்தது 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் 'யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது' ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
வானொலி - Radio
நிறுவனம் - Company
எண்ணிக்கை - Count
கொண்டாட்டம் - Celebration
பேரணி - Rally/Parade
திறமை - Skill
வேற்றுமை உருபு பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும் மற்றும்
ஏதாவது இரண்டு வேற்றுமை உருபுகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.
பாட நூல் 6 - பகுதி 1: 3.6.1, 3.6.2, 3.6.3 - பக்கம் 74-75
கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளைச் செய்யவும்.
3.6.1) கீழ்க்காணும் தொடர்களை வினைப் பயன்நிலை கொண்டு நிரப்புக
3.6.2) கீழ்க்காணும் தொடர்களைப் பெயர்ப் பயன்நிலை கொண்டு நிரப்புக
3.6.3) கீழ்க்காணும் தொடர்களை வினாப் பயன்நிலை கொண்டு நிரப்புக
இலக்கணப் பயிற்சி புத்தகம் பள்ளியில் கொடுக்கப்பட்ட 'இலக்கணப் பயிற்சி புத்தகத்தில்'
ஆண்பால் சொற்களைப் பெண்பால் சொற்களோடு பொருத்துக #1 வீட்டுப்பாடம் (வாரம் 13) செய்யவும்.
பெண்பால் வாக்கியத்தை ஆண்பால் வாக்கியமாக மாற்று #2 வீட்டுப்பாடம் (வாரம் 13) செய்யவும்.