வாரம் 24: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 6 - பகுதி 2: 5.12 - பக்கம் 47-48
கொடுக்கப்பட்டுள்ள பகுதியைப் படித்து கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
படித்த தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளிலுள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும் மற்றும்
ஏதாவது இரண்டு வேற்றுமை உருபுகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.
மாணவர்கள், சென்ற வாரம் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இவ்வாரம் பயன்படுத்தக் கூடாது.
பாடநூல் 6 - பகுதி 2: 5.9, 5.9.1 - பக்கம் 43, 44 பகுதியைப் படித்து, கேள்விகள்-1,3,4,6,7க்குச் சரியான விடையை எழுதவும்.
பாடநூல் 6 - பகுதி 2: 5.10 - பக்கம் 44, 45 5.10.1, 5.10.2 கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளைச் செய்யவும்.
5.10.1) சரியான பொருளுடன் பொருத்துக ஒன்று கோடு - ஒரு பொருளை மட்டும் கொடு ஒன்றுமில்லை - எதுவும் இல்லை ஒன்றுப் போ - ஒன்றாகக் கலந்துவிடு ஒன்று செய் - ஒரு செயலை மட்டும் செய்
5.10.2) கை என்னும் சொல்லுடன் இணைத்து புதிய சொல்லை உருவாக்குக
பாடநூல் 6 - பகுதி 2: 5.11 - பக்கம் 46 கொடுக்கப்பட்டுள்ள விடுகதை பயிற்சியைச் செய்யவும்.
5.11) விடுகதை
இலக்கணப் பயிற்சி புத்தகம் பள்ளியில் கொடுக்கப்பட்ட 'இலக்கணப் பயிற்சி புத்தகத்தில்' 'இன்' வேற்றுமை உருபு #1 வீட்டுப்பாடம் (வாரம் 24) செய்யவும்.