வாரம் 21: வீட்டுப்பாடம்
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். பேச்சுச் சொற்கள் ஆங்காங்கே பேசுவது தவறில்லை.
பாடநூல் 6 - பகுதி 2: 5.2 - வாசிப்போம் - பக்கம் 29-31 படித்துத் தலைப்பை வாசிப்புப் பயிற்சிப் பதிவேட்டில் எழுதவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பமிட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
இந்தப் பத்தியில் உள்ள ‘நகர’ சொற்களை அடிக்கோடிடு.
வாக்கியங்களில் குறைந்தது 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
அழைப்பிதழ் - Invitation
உருவாக்கு - Create
தட்டச்சு - Typing
இணைத்து - Connect/join
நீக்கு - Remove
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும் மற்றும்
ஏதாவது இரண்டு வேற்றுமை உருபுகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.
மாணவர்கள், சென்ற வாரம் வாக்கியம் அமைக்க பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்தவாரம் பயன்படுத்தக் கூடாது.
கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து கதையை வாசிக்கவும்.
பின்னர் வரிசை மாறியுள்ள தொடர்களைப் படித்து முடித்து, கோடிட்ட இடத்தை நிரப்பவும்.
கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் சரி பார்க்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து கதையை வாசிக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைப் படித்து கோடிட்ட இடத்தை நிரப்பவும்.