வாரம் 20: வீட்டுப்பாடம்
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனை தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
பாட நூல் 6 - பகுதி 2: 4.9 - கருத்து விளக்கப்படம் பேசுவோம் - பக்கம் 17 - நிலநடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மாணவர்களுக்கு விருப்பமான ஒரு கதையைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளிலுள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வாக்கியங்களில் குறைந்தது 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
முதலுதவி - First aid
ஆவணம் - Document
பதப்படுத்தப்பட்ட - Processed
மின்னேற்றம் - Charge
அவசர உதவி - Emergency help
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும் மற்றும்
ஏதாவது இரண்டு வேற்றுமை உருபுகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.
மாணவர்கள், சென்ற வாரம் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்தவாரம் பயன்படுத்தக் கூடாது.
பாட நூல் 6 - பகுதி 2: 4.11.1, 4.11.2 - பக்கம் 20 பயிற்சிகளைச் செய்யவும்.
4.11.1 தொடரிலுள்ள முதல் சொல்லின் இறுதி எழுத்துடன் வேற்றுமை உருபை இணைத்து எழுதுக
4.11.2 வேற்றுமை உருபை தேர்ந்தெடுத்து எழுதுக
4.12 முன்னுணர்வு கருத்துப்போர்
பாட நூல் 6 - பகுதி 2: 4.12 - முன்னுணர்வு கருத்துப்போர் - பக்கம் 20-21 பத்தியைப் படித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களிலிருந்து பொருத்தமான விடையைக் கண்டுபிடித்து கோடிட்ட இடத்தை நிரப்பவும்.
இலக்கணப் பயிற்சி புத்தகம் பள்ளியில் கொடுக்கப்பட்ட 'இலக்கணப் பயிற்சி புத்தகத்தில்' ஒலி வேறுபாடு/வேற்றுமை உருபு/ஒருமை-பன்மை வீட்டுப்பாடம் (வாரம் 20) செய்யவும்.