வாரம் 22: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 6 - பகுதி 2: 5.5 - கருத்தூன்றிப் படிப்போம் - பக்கம் 33-34 படித்த தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாள்களில் உள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வாக்கியம் அமை
வாக்கியங்களில் குறைந்தது 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
வான்வெளி - Air space
அருங்காட்சியகம் - Museum
காட்சி - Display (also view)
முயற்சி - Try
நவீன - Modern
பாடநூல் 6 - பகுதி 2: 5.6 - பக்கம் 35-36 பகுதியை வாசித்து 5.6.1, 5.6.2, 5.6.3 - பக்கம் 37-38 உள்ள பயிற்சிகளைச் செய்யவும்.
5.6.1) கோடிட்ட இடங்களை நிரப்புக
5.6.3) கீழ்க்காணும் தொடர்களில் வேற்றுமை உருபுகளை இணைத்து எழுதுக
விமலன் தன் நண்பனுக்கு மிதிவண்டி கொடுத்தான்.
சேகரும் கீதாவும் செடியை நட்டனர்.
யாழினி மலையில் உள்ள மரங்களை இரசித்தாள்.
இன்று எனது உணவு சுவையாக இருந்தது.
விமலாவால் பிறருக்கு உதவ முடிந்தது.
வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும் மற்றும்
ஏதாவது இரண்டு வேற்றுமை உருபுகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.
மாணவர்கள், சென்ற வாரம் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்தவாரம் பயன்படுத்தக் கூடாது.
இலக்கணப் பயிற்சி புத்தகம் பள்ளியில் கொடுக்கப்பட்ட 'இலக்கணப் பயிற்சி புத்தகத்தில்' வாக்கியங்களை மற்ற இரண்டு காலங்களில் மாற்றி எழுது. #4 வீட்டுப்பாடம் (வாரம் 22) செய்யவும்.