வாரம் 5: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
● ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
● மாணவர்கள் தலைமறைவு பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
● மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
● ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைக் தவிர்க்கவும்.
● எழுத்துத் தமிழில் பேசுவதை கூடுமானவரைத் தவிர்க்கவும். ஒரு இரண்டு சொற்கள் இடையே பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
அறிந்துகொள்வோம்: பாடம் மற்றும் பயிற்சியில் உள்ள உடற்கல்வி விளையாட்டு வீரர் பெயரின் தொடக்கத்தில் (பாக்ஸ்) ஐய்த எழுத்து (ஃ) இடம் பெறுவது ஏன்?
விளக்கம்:
● It is not ஐயரெழுத்து.
● ஐய்த எழுத்து ஒரு சொல்லுக்கு இடையில் மட்டும்தான் வரும்.
● சொல்லின் முற்பகுதியில் அல்லது இறுதியில் வராது.
● தமிழில் இதற்கு தனி ஒலி இல்லை.
● ஆங்கிலச் சொல்லை அதே ஒலியில் பயன்படுத்துவதற்காக ஒரு அடையாளக் குறியீடு ஃ இங்கு இடப்படுகிறது.
● அந்தக் குறியீடு ஐய்த எழுத்து வடிவில் இருப்பதால் இந்தக் குழப்பம் ஏற்படுகிறது.
● இந்த எழுத்து மாற்றம் அண்மை காலத்தில் ஏற்பட்டுள்ளது.
இலக்கணப் பயிற்சி புத்தகம்
பள்ளியில் கொடுக்கப்பட்டது: ‘இக்கணைப் பயிற்சி புத்தகத்தில்’
● ஒவ்வொரு சொற்றொடரையும் பன்னிரெண்டு சொற்றொடரோடு பொருத்துவது #1 வீட்டுப்பாடம் (வாரம் 5) செய்யவும்.
● கொடுக்கப்பட்ட வாக்கியத்தை நல்ல வாக்கியமாக மாற்றி #2 வீட்டுப்பாடம் (வாரம் 5) செய்யவும்.
வாசித்தல் பயிற்சி
● பாடநூல் 6 - பகுதி 1: 1.12 - முன்னுரைச் கருத்தறிவோம் - பக்கம் 27 படித்து தலைப்பையை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
● மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதெனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
● பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
● மாணவர்கள் படித்த பதிப்பிலிருந்து ஏதேனும் இந்த வாசிப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதவும்.
வேற்றுமை உருப்பு பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை உருவாக்கவும் மற்றும்
ஏதேனும் இரண்டு வேற்றுமை உருபுகளை பயன்படுத்தி வாக்கியங்களை அமைக்கவும்.
● மாணவர்கள், சென்ற வாரம் வாக்கியம் அமைக்க பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்த வாரம் பயன்படுத்தக் கூடாது.
பாடநூல் 6 - பகுதி 1: 1.11.3 - பக்கம் 26
சரியான காலவினைச் சொட்டுகளை எழுத, தொகுத்து எடுத்தெழுதுக.
பாடநூல் 6 - பகுதி 1: 1.11.4 - பக்கம் 26
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனமாகப் படித்து சரி/தவறு என்று எழுதுக.
பாடநூல் 6 - பகுதி 1: 1.12.1 - பக்கம் 28 பயிற்சியை செய்யவும்.