வாரம் 8: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி (4-5 நிமிடங்கள்)
● ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம் அல்லது மாணவர்கள் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
● மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
● மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
● ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
● எளிய தமிழில் பேசுவதைக் கூடும்படியாக தவிர்க்கவும். ஒரு சில சொற்களை ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
வேற்றுமை உருபுப் பயிற்சி (விருப்பப் பயிற்சி)
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும்.
ஏதேனும் இரண்டு வேற்றுமை உருபுகளை உபயோகித்து வாக்கியங்கள் அமைக்கவும்.
● மாணவர்கள், பிற பயிற்சிகளில் வாக்கியம் அமைக்க பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இப்பயிற்சியில் பயன்படுத்தக்கூடாது.
பாடநூல் 6 – பகுதி 1: 2.5 «கருத்துணர்ந்து படிப்போம்» (பக்கம் 38–40) படித்து, தலைப்பைப் வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மேலும், தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதாவது ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர், வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து எழுதவும்.
ஒவ்வொரு வாக்கியத்திலும் குறைந்தது 4–5 சொற்கள் இருக்க வேண்டும்.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்றுக்காவது பதில் கூறும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
இணையம் – Internet
இலக்கியம் – Literature
இலக்கணம் – Grammar
காப்பியம் – Epic literature
படைப்பாளர் – Creator
பங்களிப்பு – Contribution
பள்ளியில் கொடுக்கப்பட்ட ‘இலக்கணப் பயிற்சி புத்தகத்தில்’ உள்ள பணிகளை முடிக்கவும்.
ஒருமை வாக்கியத்தை பன்மை வாக்கியமாக மாற்றும் பயிற்சி – வீட்டு வேலை #3 (வாரம் 8) செய்யவும்.