வாரம் 14: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனை தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
பாட நூல் 6 - பகுதி 1: 3.7 - கருத்தூன்றிப் படிப்போம் - பக்கம் 75-77 படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
பாட நூல் 6 - பகுதி 1: 3.7.1 பக்கம் 78</u> ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு சரியான விடையை எழுதச் செய்யவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
புத்துணர்வு - Refresh
நம்பிக்கை - Hope
நாகரிகம் - Civilization
உற்சாகம் - Excitement
சமுதாயம் - Society
பாடப்பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும்.
ஏதாவது இரண்டு வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைக்கவும்.
மாணவர்கள், சென்ற வாரம் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்தவாரம் பயன்படுத்தக் கூடாது.
சரியான விடையை எழுதவும்.
யார்
எந்த
யார்
யாரை
என்ன
பக்கம் 80 (Page 80) - பிரிவு 3.8.1 & 3.8.2
3.8.1: Match the following phrases with the correct words:
3.8.2: Choose and fill in the blanks with the appropriate words:
பக்கம் 81 (Page 81) - பிரிவு 3.9
கருத்து விளக்கப்படம் (Concept Map): Read and understand the provided announcement.
பக்கம் 82 (Page 82) - பிரிவு 3.9.1 Choose the correct answer and write it in the blank space
இலக்கணப் பயிற்சி புத்தகம்
பள்ளியில் கொடுக்கப்பட்ட 'இலக்கணப் பயிற்சி புத்தகத்தில்' குறில் நெடில்/வேற்றுமை உருவு/ஒருமை-பன்மை வீட்டுப்பாடம் (வாரம் 14) செய்யவும்.